Tamil - தமிழ்
பாதுகாப்பான வேலைகள், இன்னும் நல்ல சம்பளம்: ஆஸ்திரேலியப் பணியிட சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள்
பலவித புதிய பணியிட சட்டங்களை உள்ளடக்குவதற்காக Fair Work Act (பணியிட நியாய சட்டம்)-இல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Secure Jobs, Better Pay: Changes to Australian workplace laws (பாதுகாப்பான வேலைகள், இன்னும் நல்ல சம்பளம்: ஆஸ்திரேலியப் பணியிட சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள்)-இல் மேலதிகத் தகவல்கள் உள்ளன. இந்தத் தகவல்களை மொழிபெயர்க்க இந்தப் பக்கத்தின் மேல் உள்ள பட்டியலில் இருந்து உங்களுடைய மொழியைத் தெரிவு செய்யுங்கள் .
பகுதி நேர மற்றும் தற்காலிக ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் 10 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வீட்டு மற்றும் குடும்ப வன்முறை விடுப்புக்கான உரிமை உள்ளது.
ஆண்டுக்குரிய விடுப்பு அல்லது நோய்வாய்ப்பட்ட மற்றும் பராமரிப்பாளர் விடுப்பு போல ஊதியத்துடன் கூடிய வீடு மற்றும் குடும்ப வன்முறை விடுப்பு என்பது புதிய குறைந்தபட்ச விடுப்பு உரிமையாகும்.
இந்த விடுப்பு பின் வரும் தேதிகளிலிருந்து கிடைக்கிறது:
- 1 பிப்ரவரி 2023 - சிறு தொழில் அல்லாத பணி வழங்குபவர்களின் ஊழியர்களுக்கு
- 1 ஆகஸ்ட் 2023 - சிறு வர்த்தக முதலாளிகளின் ஊழியர்களுக்கு.
எங்கள் இணையதளத்தில் விரைவில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும்.
‘புதிய ஊதியம் பெறும் குடும்பம் மற்றும் குடும்ப வன்முறை விடுப்’பில் மேலும் அறிக. மொழிபெயர்க்க பக்கத்தின் மேலே உள்ள விருப்பத்தேர்வுப் பட்டியலில் இருந்து உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும் .
இப்பக்கத்தில் உள்ள தகவல்கள், வேலை செய்யும் இடத்தில் உள்ள உங்கள் உரிமைகளையும், கடமைகளையும் புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு உதவி செய்ய முடியும். இத்தகவல்கள், ஆஸ்திரேலியாவில் வேலை செய்கிற அல்லது வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிற பெரும்பாலானவர்களுக்குப் பொருந்துகிறது.
உங்களுக்கு ஓர் மொழிபெயர்ப்பாளர் தேவையானானால்:
- ஓர் உள்ளூர் அழைப்புக் கட்டணச் செலவில், மொழிபெயர்ப்பு மற்றும் மொழிமாற்றச் சேவையை (TIS) 131 450 என்ற எண்ணில் அழையுங்கள்
- நீங்கள் எந்த மொழியில் பேசுகிறீர்கள் என்பதை அந்த TIS ஆபரேட்டரிடம் சொல்லுங்கள்
- 13 13 94 என்ற எண்ணில் Fair Work Infoline-க்கு தொலைபேசியில் அழைக்கும் படி அந்த ஆபரேட்டரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தேவையான தகவல்களைக் கண்டு கொள்வதற்கு கீழுள்ள இணைப்பில் கிளிக் செய்யுங்கள்.